• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களின் வட்டமேசை மாநாடு!

September 11, 2025 தண்டோரா குழு

அனைத்திந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு மற்றும் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களின் வட்டமேசை மாநாடு, கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

“அறிவியல் தலைமைத்துவம்: வளர்ந்த பாரதம் மற்றும் அதற்கு அப்பால் மாற்றத்தை உருவாக்குவதற்கான உந்துசக்தி” என்ற மையக்கருத்தின் கீழ் இந்த மாநாடு நடத்தப்பட்டது. விழாவிற்கு வந்த அனைவரையும் அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் பாரதி ஹரி சங்கர் வரவேற்று பேசினார்.

இந்த வட்டமேசை மாநாட்டிற்கு பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார்.அதைத் தொடர்ந்து நடைபெற்ற விழாவில் இந்திய பல்கலைக்கழகசங்கங்களின் பொதுச்செயலாளர் டாக்டர் பங்கஜ் மிட்டல்,மேற்குவங்க சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரூபமித்ராசவுத்ரி,
அவினாசிலிங்கம் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் எச் இந்து ஆகியோர் பேசினார்கள்.

முன்னதாக நடைபெற்ற விழாவில்புதிதாக நியமிக்கப்பட்ட துணைவேந்தர்கள் வட்டமேசை மாநாட்டைதேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் தலைவர் பேராசிரியர் என் எஸ் கல்சி ஆன்லைன் மூலமாக தொடங்கி வைத்து பேசினார். அதை தொடர்ந்து பல்வேறு
நிகழ்வுகள் நடைபெற்றன.

இறுதியில் அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் இந்து நன்றி கூறினார்.நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து புதிதாக நியமிக்கப்பட்ட சுமார் 150 துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.
2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், கல்வித் தலைமைத்துவம், பாடத்திட்டப் புதுமைகள், மதிப்பீடு, நிர்வாக சீர்திருத்தங்கள், நிலையான நடைமுறைகள், உயர்கல்வியின் சர்வதேசமயமாக்கலுக்கான இந்திய நெட்வொர்க் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் குறித்து விவாதிக்கப்படும்.

மேலும், உலகளாவிய கூட்டாண்மை, இந்திய அறிவு அமைப்புகள் மற்றும் கல்வியில் செயற்கை நுண்ணறிவு குறித்தும் அமர்வுகள் நடைபெறும்.
இந்த மாநாடு, வலுவான தலைமைத்துவத்தை வழங்குவதற்கும்,எதிர்காலத்திற்குத் தயாரான நிறுவனங்களை வளர்ப்பதற்கும் உதவும் வகையில் வல்லுநர்களின் உரை, குழு விவாதங்கள், வழக்கு ஆய்வுகள் மற்றும் அனுபவப் பகிர்வுகள் என திட்டமிடப்பட்டுள்ளது.

பங்கேற்கும் துணைவேந்தர்கள் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளவும், உள்ளடக்கிய, நிலையான மற்றும் உலகளாவிய பொருத்தமான பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான உத்திகளை வடிவமைக்கவும் இந்த மாநாடு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

மேலும் படிக்க