• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா

January 22, 2021 தண்டோரா குழு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் கல்வியால் இந்த கல்வியாண்டு வீணாகாமல் இருந்ததாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் தெரிவித்துள்ளார்.

கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு அனைத்து மாணவிகளும் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட வில்லை. மாறாக முனைவர் பட்டம் பெறுவோர் மற்றும் பல்கலைக்கழக அளவில் பதக்கங்களை பெற்ற 166 பேர் மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் இந்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது,

சுவாமி விவேகானந்தர் கூறியது போல் பறவைகளுக்கு இரண்டு இறக்கையும் வளர வேண்டும் அப்போது தான் பறக்கும். அதே போல் ஆண்களுக்கு கிடைக்கும் போல் பெண்கள் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இருபாலரும் கல்வி கற்றால் தான் நாடு முன்னேற்ற பாதையில் செல்லும்.நான் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் போதும் பெண்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவதை பார்க்கிறேன்.

இது மகிழ்ச்சியளிக்கிறது. இதில் அவினாசி லிங்கம்பல்கலைக்கு பெரும் பங்கு உள்ளது. இந்த பல்கலைக்கழகத்திற்கென ஒரு தரம் உள்ளது. இன்னும் தரம் உயரும் என எதிர்பார்க்கிறேன். இந்தியாவில் 1000ம் பல்கலைக்கழகங்கள் உள்ளன. 16 முதல் 17 லட்சம் பள்ளிகள் உள்ளன. மொத்தம் 33 கோடி மாணவர்கள் உள்ளனர். இந்த 33 கோடி என்பது அமெரிக்க மக்கள் தொகைக்கு சமமானது. கொரோனா காலத்திலும் இந்த கல்வியாண்டு வீணாகவில்லை. தேர்வுகளும் தடையின்றி நடத்தப்பட்டுள்ளது. இத்தனை கோடி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் கல்வி கொடுத்தது இந்தியாவின் சாதனை என்றார்.

மேலும் படிக்க