May 5, 2018
தண்டோரா குழு
கோவை அவினாசிலிங்கம் கல்வியியல் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட அம்மையப்பன் அரங்கம் மற்றும் குருமகராஜ் கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது.
கோவை அவினாசிலிங்கம் மகளிர் பொறியியல் கல்லூரி மாணவியர்களும் தொழில்நுட்ப கல்வி பயில்வதற்காக பெண்களுக்கென பிரத்யேகமாக துவங்கப்பட்டது.கோவை தடாகம் அருகில் அமைந்துள்ள இக்கல்லூரி வளாகத்தில் பொறியியல் கல்லூரியோடு கல்வியியல்,உடற்கல்வி பட்டப்படிப்பு வகுப்புகளும் செயல்பட்டு வருகின்றன.சென்ற ஆண்டு முதல் கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக் கான சுய நிதிப்பிரிவுகளும் துவங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இக்கல்லூரியில் சுமார் 2500 பேர் அமரும் வசதி கொண்ட புதிய ஆடிட்டோரியம் மற்றும் சுயநிதிப்பிரிவுகளுக்கான புதிய கட்டிடங்களுக்கான திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
மறைந்த அவினாசிலிங்கம் அய்யாவின் 115 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவில் அவினாசிலிங்கம் பல்கலைகழகத்தின் வேந்தர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.புதிதாக அமைத்த அம்மையப்பன் அரங்கம் மற்றும் ஸ்ரீகுருமகராஜ் கட்டிடத்தை சுவாமி கரிஷ்டானந்த மகராஜ் ஜீ திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் துணை வேந்தர் பிரமாவதி விஜயன்,பதிவாளர் கௌசல்யா உட்பட கல்லூரி மாணவியர் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.