• Download mobile app
13 Aug 2025, WednesdayEdition - 3472
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அவிநாசி சாலையில் மேம்பால பணிகள் தீவிரம் 5 இடங்களில் சுரங்க நடைபாதை அமைக்க திட்டம்

January 4, 2022 தண்டோரா குழு

கோவை அவிநாசி சாலையில் 10.10 கி.மீ. நீளத்தில் தமிழகத்திலேயே மிகவும் நீண்ட உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கோவை அவினாசி சாலையில் ரூ.1621.30 கோடி மதிப்பில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் துவங்கி நடந்து வருகிறது.

கோவை மாநகரின் பிரதான சாலையாக கருதப்படும் அவிநாசி சாலையில் விமான நிலையம், பல்வேறு கல்லூரிகள், பள்ளிகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், டைடல் பார்க் போன்றவை அமைந்துள்ளன.
சேலம், ஈரோடு, திருப்பூர் என பல முக்கிய நகரங்களுக்கும் முக்கிய வழித்தடமாகவும் இருப்பதால் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் 10.10 கி.மீ. நீளத்தில் இந்த பறக்கும் பாலம் அமைக்கப்படுகிறது.

இனிவரும் 30 ஆண்டுகளுக்கு இருக்கும் வாகன பெருக்கத்தையும் எதிர்கொள்ளும் வகையில் இப்பாலம் அமைக்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இப்பாலப்பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

இந்த உயர்மட்ட மேம்பாலம் மொத்தம் 10.10. கிமீ நீளத்திற்கு அமையவுள்ளது. 17.25 மீ அகலத்தில் நான்கு வழிப்பாதையாக அமையவுள்ளது. நான்கு இடங்களில் ஏறுதளமும், நான்கு இடங்களில் இறங்கு தளமும் 6 மீட்டர் அகல ஓடுபாதையுடன் அமையவுள்ளது.இப்பணியில் 10.50 மீட்டர் அகலத்தில் இரு புறமும் சேவைச் சாலையும், 1.50 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன் கூடிய கழிவு நீர் கால்வாய் அமையவுள்ளது. இப்பாலம் அமையவுள்ள கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை முக்கியமான ஐந்து இடங்களில் சுரங்கநடைபாதை அமைய உள்ளது.

மேலும், மூன்று இடங்களில் சிறுபாலங்களை அகலப்படுத்துதல் மற்றும் மூன்று இடங்களில் சிறுபாலங்களை திரும்பக்கட்டுதல் பணியும் நடைபெறவுள்ளது. தற்போது இந்த மேம்பால பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது’’ என்றார்.

மேலும் படிக்க