March 3, 2018
தண்டோரா குழு
கோவை மாவட்டம் மேற்கு மலைதொடர்ச்சியை ஒட்டி இருக்கும் வன பகுதிகளில் இருந்து விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருவது வாடிக்கையாகியுள்ளது.
இந்நிலையில் இன்று(மார்ச் 3)அதிகாலை பாலக்காடு ரோட்டிலுள்ள மதுக்கரை மைல்கல் அருகே வனப்பகுதியில் இருந்து மான்கள் கூட்டமாக ஊருக்குள் வந்துள்ளது.இதனையடுத்து அங்கிருந்த தெருநாய்கள் மான் கூட்டத்தை தூரத்தியதை அடுத்து மான்கள் மீண்டும் காட்டிற்குள் ஒட்டின. இதில் ஒரு புள்ளி மான் மட்டும் நாய்களிடம் சிக்கியுள்ளது.
நாய்கள் புள்ளி மானை கடிப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், மானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.இதனையடுத்து மானுக்கு கால்நடைத்துறை மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர்.பின்பு வனத்துறையினர் மட்டத்துக்காடு வனப்பகுதியில் மானை விட்டனர்.