• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அருகே கஞ்சா சாக்லேட் பறிமுதல் : விற்பனைக்கு வைத்து இருந்த நபர் கைது

May 14, 2024 தண்டோரா குழு

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் நிலைய காவல் துறையினர் காபி கடை சந்திப்பு அருகே சென்று சோதனை மேற்கொண்டு போது கஞ்சா சாக்லேட்யை விற்பனைக்கு வைத்து இருந்த உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த
சௌதி பனாஃபா மகன் மோகன் (50) -யை கைது செய்து அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா சாக்லேட்யை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க