தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு, குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்கிறது. அதன் ஒரு நிகழ்வாக கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு ஆய்வு மேற்கொண்ட பொது கணக்கு குழுவின் தலைவர் செல்வப் பெருந்தகை குழந்தைகள் வார்டு, MRI ஸ்கேன் ஆய்வகம், உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
மேலும் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்கு பழுதடைந்துள்ள சாலைகளை சரி செய்யுமாறு மருத்துவமனை முதல்வரிடம் தெரிவித்தார். மேலும் அங்குள்ள நோயாளிகளிடமும் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, 2018ம் ஆண்டு தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸஸ் கார்ப்பரேசனால் வழங்கப்பட்ட MRI கருவியை 90 நாட்களுக்குள் பொருத்தவில்லை என்று பரிந்துரைத்ததையடுத்து அது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதனை சரியான நேரத்தில் தான் பதிவு செய்திருக்கிறோம் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.
இது குறித்து நாளை நடைபெறும் குழுவில் முடிவு செய்ய உள்ளோம். கோவை அரசு மருத்துவமனை பல்வேறு வேலைகள் பராமரிக்கப்பட வேண்டியுள்ளது, அதற்காக இவர்கள் கேட்கும் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கி தர வேண்டும். இந்த கோவை அரசு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி இன்னும் தரம் உயர்த்தி அடிப்படை ஆதாரங்களை செய்து தர வேண்டும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என பொது கணக்கு குழு மூலமாக பரிந்துரைத்துள்ளோம் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது குழுவின் உறுப்பினர்கள், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா, சட்டப்பேரவை இணை செயலாளர் தேன்மொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு