May 20, 2021
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனைக்கு இரண்டு அமரர் ஊர்தியை கொடுத்து கோவை தெற்கு தொகுதி எம் எல் ஏ வானதி ஸ்ரீனிவாசன் உதவினார்
கோவை அரசு மருத்துவமனையில் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட கோவை தெற்கு தொகுதி எம் எல் ஏ வானதி ஸ்ரீனிவாசன் சுகாதாரப்பணியாளர்கள் பற்றாக்குறை,அமரர் ஊர்தி வசதி, ஆக்சிஜன் செறிவூட்டு.வசதிகள் தேவைப்படுவதாக மருத்துவ நிர்வாகத்தினர் தெரிவித்ததை அடுத்து , சுகாதார பணியாளர் சிலரை பணியமர்த்தியதோடு 3 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் வழங்கி உதவினார்
இந்நிலையில் அதிகப்படியான இறப்புகள் ஏற்படுவதால் ஒரே ஊர்தியில் ஐந்துக்கும் மேற்பட்ட பிணங்களை அடக்கம் செய்ய எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இரண்டு அமரர் ஊர்திகளை அரசு மருத்துவமனைக்கு இன்று வழங்கினார்.