• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் ராகிங்கை தடுக்க சிறப்பு நடவடிக்கை – டீன் நிர்மலா

November 12, 2022 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் ராகிங் என்ற பெயரில் மாணவர்கள் அத்துமீறுவதை தடுக்கும் வகையில், ஆஸ்பத்திரியின் டீன் தலைமையில், பேராசிரியர்கள், போலீசார் உள்ளிட்ட 7 பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது:-

கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி விடுதி கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் ஆண்கள் 200 பேர், பெண்கள் விடுதி யில் 270 பேர் என 470 பேர் தங்கி படித்து வருகின்றனர்.இவர்களுக்கு ராகிங் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜூனியர் மாணவர்களிடம் வரம்பு மீறி செயல்படக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவிர, ராகிங் தடுக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. விடுதி மற்றும் கல்லூரியில் ராகிங் தொடர்பான புகார்களை மாணவர்கள் அளிக்க புகார்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ராகிங் கமிட்டியில் உள்ள நபர்களின் மொபைல் எண்கள் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், ஜூனியர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், ராகிங் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்கவும் விடுதியில் உதவி பேராசிரியர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நடந்து முடிந்துள்ள மருத்துவ மாணவர்கள் கவுன்சிலிங்கை அடுத்து வரும் 15-ந் தேதி முதல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது.தற்போது வரை முதலாமாண்டில் 177 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.இதில், பலர் விடுதியில் தங்கி படிக்கவுள்ளனர்.இந்த மாணவர்களுக்கும் ராகிங் தொடர்பான விழிப்புணர்வு அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க