• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை:ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களை மீண்டும் இயக்க கோரிக்கை

June 20, 2018 தண்டோரா குழு

கோவையில் இருந்து ரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களை மீண்டும் இயக்குவதோடு கூடுதலாக பெரிய ரக விமானங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை தொழில்துறையினர் வலியுறித்தியுள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நாளொன்றிற்கு 12 முதல் 15 விமானங்கள் உள்நாடு மற்றும் சிங்கப்பூர்,துபாய் போன்ற நாடுகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.பல்வேறு விமான சேவை நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வரும் நிலையில் கோவை,திருப்பூர்,ஈரோடு,நாமக்கல்,கரூர் மாவட்ட தொழில்துறையினருக்கு தொழில் நிமித்தமாக சென்று வர பெரும் உதவியாக இருந்து வந்தது.

இந்நிலையில் கோவையிலிருந்து சென்னை செல்லும் 4 விமானங்கள்,பெங்களூரூ செல்லும் 3 விமானங்கள் என 7 விமானங்களின் சேவையை வரும் ஜூலை 1ம் தேதி முதல் நிறுத்தப்போவதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்த திடீர் அறிவிப்பு கோவை தொழில்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த முடிவு தொடர்பான தொழில் துறையினரின் ஆலோசனை கூட்டம் கோவை புலியகுளம் பகுதியில் உள்ள கான்பிடரேசன் ஆப் இந்தியன் இண்டஸ்ட்ரீஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.ஐ இன் தலைவர் ரமேஷ் மற்றும் முன்னாள் தலைவர் ரவிசாம் கூறுகையில்,

ஜெட் ஏர்வேசின் இந்த திடீர் அறிவிப்பு அதிருப்தி அளிப்பதாக கூறினர்.கூடுதலாக பெரிய ரக விமானங்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை கோவை தொழில் துறையினர் முன்வைத்து வரும் நிலையில் 7 விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது தொழில்துறையினரை கடுமையாக பாதிக்கும்.இலாபகரமான முறையில் இயங்கி வரும் இந்த சேவைகள் தடைபடுவதால் சுமார் 25 ஆயிரம் இருக்கைகள் மாதத்திற்கு ரத்தாகும் எனவும் தெரிவித்தனர்.

விமான சேவைகள் குறைக்கப்படுவதால் இருக்கைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கும் எனவும் வெளிநாட்டில் இருந்து வரும் தொழில்துறையினர் கூடுதலாக செலவழிப்பதை தவிர்க்க வணிகத்தை தவிர்க்கும் நிலை ஏற்படும்.விஸ்டா ஏர்,ஏர் ஏசியா போன்ற விமான சேவைகள் கூடுதலாக விமானங்களை நிறுத்த இடமில்லாத நிலையில் இருப்பதை கருத்தில் கொண்டு அந்நிறுவனங்களின் சேவையை கோவைக்கு மாற்றவேண்டும் எனவும் அதற்கு சில மாதங்கள் ஆகும் என்பதால் அதுவரையிலும் சேவைகளை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்,கோவை விமான நிலையத்தில் இருந்து போயிங்,ஏர் பஸ் போன்ற பெரிய ரக விமானங்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள்,இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர்,இணை அமைச்சர்கள்,மற்றும் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க