கோவை சின்னவேடம்பட்டி சக்தி நகரைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் ,திவ்யா ஆகியோரின் மகள் சாதனா. மூன்றாம் வகுப்பு பயிலும் 8 வயதே நிரம்பிய சாதனா. காலை ஒன்பது மணிக்கு துவங்கி மாலை ஐந்து மணி வரை தொடர்ந்து தனது இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றிபடி பரதநாட்டியம் ஆடி அசத்தியுள்ளார்.
சின்னவேடம்பட்டி சி.எம்.எஸ்.கல்லூரி அரங்கில் நடைபெற்ற, இவரது, இந்த சாதனையை INDIA BOOK OF WORLD RECORDS அங்கீகரித்துள்ளது. தொடர்ந்து சிறுமி சாதனாவிற்கு, இந்தியன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு தீர்ப்பாளர் பிரகாஷ்ராஜ்,பதக்கம்,கேடயம் மற்றும் கோப்பையை வழங்கினார்.நிறுவனர் டாக்டர் சதாம் உசைன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பரத குரு மகாலட்சுமி, சின்னவேடம்பட்டி முல்லை தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு கழகத்தின் மேலாளர் கார்த்திக், துணை பயிற்சியாளர் கலையரசி, மற்றும் சிலம்ப பயிற்சி மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தனது சிறு குழந்தை பருவத்திலேயே இந்த சாதனை செய்த சிறுமி சாதனா கூறுகையில்,ஐந்து வருடங்களாக நாட்டியத்தையும்,ஒன்றரை வருடங்களாக முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் சிலம்பத்தையும் கற்று வருவதாக கூறிய அவர்,இரண்டையும் இணைத்து இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவர்,இந்த சாதனையை தந்தையார் தினமான இன்று தனது தந்தைக்கு சமர்ப்பிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.. சிறுமி சாதனாவின் இந்த சாதனை முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது