December 26, 2021
தண்டோரா குழு
பொதுமக்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் கோவையை சேர்ந்த வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப்பிற்கு வழக்கு செம்மல் விருது வழங்கப்பட்டது.
கோவையை சேர்ந்தவர் வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப்.சமூக பணிகளில் ஆர்வம் காட்டி வரும் இவர் கடந்த கொரோனா கால ஊரடங்கின் போது ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவை பணியாற்றி வந்தவர்.மேலும் பல்வேறு சட்டங்கள் குறித்து பொதுமக்களிடையே இலவசமாக விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவரது சட்ட விழிப்புணர்வு சேவையை பாராட்டி இதயங்கள் பேசட்டும் நிகழ்ச்சியில் வழக்கு செம்மல் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நீதிமன்றத்திற்கு வரும் பொதுமக்களுக்கு சட்டங்கள் குறித்து சரியான புரிதலை ஏற்படுத்தும் விதமாக சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும்,இது போன்ற விருதுகள் தம்மை மேலும் ஊக்கப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.