July 24, 2018
தண்டோரா குழு
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த நான்கு நாட்களாக வேலை நிறுத்த போடாராட்டதில் ஈடுபட்டு வருக்கின்றனர்.
இந்நிலையில்,கோவையடுத்த மேட்டுபாளையத்தில் இருந்து நிஜாம் என்பருக்கு சொந்தமான லாரியில் காய்கறிகள் ஏற்றி கேரள மாநில சங்கனாசேரி கொண்டு செல்ல,திங்கள்கிழமை இரவு 10 மணி அளவில் புறப்பட்டுள்ளனர்.இதில் லாரி ஓட்டுனர் நூருல்லா மற்றும் கிளீனர் விஜய் என்ற முபாரக் பட்சா சென்றுள்ளனர்.
அப்போது வாளையாறு சோதனை சாவடியை கடந்து வாளையாறு அடுத்த கஞ்சிக்கோடு அருகே மர்ம நபர்கள் சிலர் லாரியின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.கல் வீச்சில், நெஞ்சுப்பகுதியில் பலத்த காயம் அடைந்த முபாரக் பாட்ஷா,சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஓட்டுனர் நூருல்லா காயங்களுடன் பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போடாராட்டதில் ஈடுபட்டு வரும் நிலையில்,லாரி இயக்கப்பட்டதால் இந்த கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில்,கேரள லாரி உரிமையாளர்கள் இந்த சம்பவதிற்கு தொடர்ப்பு இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.இந்நிலையில்,கிளீனர் இறப்புக்கு கல்வீச்சு காரணமல்ல,இது ஒரு கவுரவ கொலையாக இருக்கலாம் என கேரள போலீசார் சந்தேகித்துள்ளனர்.முபாரக் பாட்ஷாவின் இயற்பெயர் விஜய்குமார் காதலித்து திருமணம் செய்து கொண்டால் அவர் முஸ்லீமாக மதம் மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.