February 13, 2021
தண்டோரா குழு
கோவையை சேர்ந்த பள்ளி மாணவி எழுதிய A Half Wolf புத்தக வெளியீட்டு விழா கோவை புரூக் பீல்ட்ஸ் மாலில் உள்ள ஒடிசியில் நடைபெற்றது.இதில் மார்க் ப்ளை பப்ளிகேஷன் சார்பாக புத்தகம் வெளியிடபட்டது.
கோவையை சேர்ந்த பள்ளி மாணவி ஜனனி.கண்ணன் மற்றும் பிரியா ஆகியோரின் மகளான இவர்,தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வமுடைய இவர்,தற்போதையை பள்ளி விடுமுறையை பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக கல்வி பயின்றதுடன் 300 பக்கங்கள் கொண்ட THE HALF WOLF எனும் ஆங்கில நாவலை எழுதி முடித்துள்ளார்.
இந்நிலையில் இளம் வயதிலேயே மாணவியின் இந்த சாதனையை பாராட்டி,ஊக்குவிக்கும் விதமாக பிரபல புத்தக வெளியீட்டாளர் மார்க் ப்ளை பப்ளிகேஷன் இவரது புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். இதற்கான விழா கோவை பரூக் பீல்ட்ஸ் வணிக வளாகத்தில் உள்ள ஒடிசியில் நடைபெற்றது.மார்க் ப்ளை பப்ளிகேஷன் சார்பாக நடைபெற்ற,
இதில் பிரபல சினிமா பட இயக்குனர் நீரஜ் கேர் மற்றும் மார்க் ப்ளை பப்ளிகேஷன் நிறுவன தலைவர் அக்ஷய் சர்மா ஆகியோர் இணைந்து புத்தகத்தை வெளியிட்டனர்.
இதற்கான விழாவில் கே.ஆர்.எஸ். கிருஷ்ணன்,கோவை மாவட்ட நடிகர் சங்க தலைவர் சாகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து மாணவி ஜன்னி பேசுகையில்,
தற்போது மாணவ,மாணவிகளிடையே வாசிப்பு திறன் குறைந்து வருவதாக கூறிய அவர், வரும் காலங்களில் புத்தகங்கள் வாசிப்பதை அனைவருக்கும் ஊக்குவிக்கும் வகையில் இந்த புத்தகத்தை எழுதியதாக கூறினார்.
கல்வி கற்று கொண்டே இளம் எழுத்தாளராக உருவாகி உள்ள பள்ளி மாணவியை எழுத்தாளர்கள் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர்.