• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையை சேர்ந்த டாக்டர் சுப்ரமணியம் கின்னஸ் சாதனை முயற்சி !

November 18, 2020 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த டாக்டர் சுப்ரமணியம் உலகிலேயே நீண்ட தலைப்பை உடைய , ‘ டேனியல் ராட்கிளிப் புத்தகத்தை அதிகம் பேர் பேசிய ஒலிநூல் என்ற தலைப்பில் கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.

வயதை காரணம் காட்டி ஒதுங்கி அமர்ந்து விடுபவர்கள் மத்தியில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளார்.டாக்டர் சுப்ரமணியன்.63 வயதான டாக்டர் சுப்ரமணியன் ஒரு எழுத்தாளர் என்ற அவரது பயணத்தில் வரலாற்று பக்கங்களை அவரே எழுதியுள்ளார்.

ஒலிநுாலின் அதிகம் பேசியவர் ‘என்ற சாதனையை எட்ட அவர் முயற்சியை மேற்கொண்டார்.இதற்காக அவர் உலகிலேயே நீண்ட தலைப்பை உடைய ‘ டேனியல் ராட்கிளிப் ( 28.167 எழுத்துக்கள் மற்றும் 5532 வார்த்தைகளை முகப்பு பக்கத்தில் கொண்டது ) என்ற ,அவர் எழுதிய புத்தகத்தை தேர்வு செய்தார்.கின்னஸ் உலக சாதனை நாளில் நடந்த இந்த நிகழ்ச்சியை கின்னஸ் உலக சாதனைகள் ,’அதிகம் பேர் பேசிய ஒலிநூல் என்ற தலைப்பில் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த ஒலி நுாலில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான 31 கலைஞர்கள் பங்கேற்று பேசியுள்ளனர்.இதற்கு முன்னர் 20 கலைஞர்கள் பேசிய நூலின் சாதனையை இது முறியடித்துள்ளது.இதற்கு முன் அவர் பல கின்னஸ் சாதனைகளை செய்துள்ளார்.2006 ல் . மிக நீண்ட கம்ப்யூட்டர் வகுப்பு நடத்தினார். இதில் முழுவதிலும் இருந்து 16 நாடுகளை சேர்ந்த 1934 மாணவர்கள் பங்கேற்றனர் . 2012 ல் , வேகமான நகர்படங்களை ( அனிமேட்டர் ) உருவாக்கியவர் என்ற சாதனையையும் பெற்றார்.தொடர்ச்சியாக 6 மணி தொடர்ச்சியாக பாடங்களை நடத்தி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க