June 26, 2021
தண்டோரா குழு
தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை ஜூஹா ஜைனப்பிற்கு, முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு நோய் (Spinal Muscular Atrophy) சிகிச்சைக்காக ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி இன்று செலுத்தப்பட்டுள்ளது.
கோவையில் வசித்து வரும் அப்துல்லா ஆயிஷா தம்பதியினரின் குழந்தை ஜூஹா ஜைனப்பிற்கு முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு எனும் அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜூஹாவை காப்பாற்ற அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ரூ.16 கோடி விலை மதிப்பிலான ஊசி தேவைப்பட்டது.
இதனையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் உட்பட பல்வேறு தரப்பினரிடமும் நிதி உதவிக்காக ஜூஹாவின் பெற்றோர் போராடி வந்தனர்.இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த சேர்ந்த ‘டர்பைன்’ மருந்து விற்பனை மையத்தின் மூலம் குலுக்கல் முறையில் ஜூஹாவிற்கு இலவசமாக ஊசி கிடைத்துள்ளது.
டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று ஜூஹாவிற்கு ஊசி செலுத்தப்பட்டது.