• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையை உலுக்கிய சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் இருவருக்கும் சாகும் வரை சிறை தண்டனை

December 24, 2020 தண்டோரா குழு

காரமடையில் மயக்க ஊசி செலுத்தி எல்.கே.ஜி. சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குற்றவாளிகள் இருவருக்கு சாகும் வரை சிறை தண்டனையும்,ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

கோவை மாவட்டம் காரமடை அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பிரி.கே.ஜி.முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளது.பிரபலமான பள்ளி என்பதால் காரமடை மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். மாணவர்களில் பெரும்பாலானோர் பள்ளி பேருந்துகளில் பள்ளிக்கு வருவர்.இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கும் 4 வயது சிறுமியை பள்ளி பேருந்தில் வைத்தே மயக்கி ஊசி செலுத்தி ஓட்டுநர் மற்றும் உதவியாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகாரளிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.அப்போது, மாணவிக்கு மயக்க ஊசி செலுத்தி பாலியல் தொந்தரவு செய்தது பள்ளி பேருந்து ஓட்டுநர் ரங்கராஜபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (37) மற்றும் அவரது உதவியாளர் காரமடை கண்ணார்பாளையம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து(55) என்பதும் தெரிய வந்தது.அவர்கள் இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கோவிந்தராஜ், மாரிமுத்து இருவரையும் போலீசால் கோவை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவு பெற்று பேருந்தின் ஓட்டுநர் கோவிந்தராஜ் மற்றும் அவரது உதவியாளர் மாரிமுத்து இருவரையும் குற்றவாளிகள் என தீர்மானித்து, இயற்கை மரணம் எய்தும் வரை அவர்களுக்கு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தும் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார்.

கோவையை உலுக்கிய சிறுமி பலாத்காரம் சம்பவத்தில் குற்றவாளிகள் இருவருக்கு சாகும் வரை சிறை தண்டனையும்,ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க