• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையைச் சேர்ந்த தடகளப் பயிற்சியாளருக்கு சிறந்த பயிற்சியாளர்க்கான தமிழக அரசின் விருது

February 10, 2021 தண்டோரா குழு

சிறந்த பயிற்சியாளர்க்கான தமிழக அரசின் விருது கோவையைச் சேர்ந்த தடகளப் பயிற்சியாளர் நாராயணனுக்கு வழங்கப்பட்டது.

தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த பயிற்சியாளர்கள் நடுவர்கள் தடகள வீரர்களை கண்டறிந்து முதலமைச்சர் விருது வழங்கப்படும்.2010 முதல் 2018 ஆம் ஆண்டு வரை தகுதியான நபர்களுக்கு விருது வழங்கப்படவில்லை.இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் விருது வழங்கும் விழா நடந்தது இதில் கோவையைச் சேர்ந்த நாராயணனுக்கு 2017 – 18 ஆம் ஆண்டுக்கான சிறந்த பயிற்றுனர் விருது வழங்கப்பட்டது.தொடர்ந்து 46 நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

பயிற்சியாளர் நாராயணன் கூறுகையில்,

30 ஆண்டுகளுக்கு மேலாக பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறேன்.இதுவரை சர்வதேச 8 தேசிய அளவிலான போட்டிகளில் என்னுடைய வீரர்கள் பதக்கம் வென்றுள்ளனர் 25க்கும் மேற்பட்ட வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று உள்ளனர் என்றார்.

மேலும் படிக்க