• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 91 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர் – மாவட்ட ஆட்சியர்

October 9, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவையில் கடந்த 4 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாம் மூலம் 4,41,000 நபர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதாகவும், இதில் மாநில அளவில் கோவை மாவட்டம் சிறந்த செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்த மக்கள் தொகையான 38,67,926 பேரில் இதுவரை முதல் தவணை ஊசி 91 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை ஊசி 33 சதவீதம் பேரும் செலுத்தியுள்ளனர். 25,63,212 பேர் முதல் தவணைத் தடுப்பூசியும் 92,22,000 பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.அதே சமயம் இரண்டு லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தவில்லை என கூறினார். நாளையும் 1425 முகாம் அமைக்கப்பட்டு மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாகவும் 2 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களைப் பொருத்தவரை இரண்டு தவணைத் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டதற்கான சான்று அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட RTPCR நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே கோவை மாவட்ட எல்லைக்குள் அனுமதிக்கப்பட்டதாகவும் கேரள எல்லைகளை ஒட்டியுள்ள மலைவாழ் மக்கள் இருக்கும் பகுதிகளில் செயல்படும் பள்ளிகளில் வாரம் ஒருமுறை மாணவர்களுக்கு RTPCR பரிசோதனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் சாலையோரம் வசிப்பவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் மூலம் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் தொற்று முழுமையாக ஒழியவில்லை என்று கூறிய அவர் மக்கள் இதனை மனதில் வைத்துக் கொண்டு இனிவரும் பண்டிகைகளை பாதுகாப்புடன் கொண்டாட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அரசின் உத்தரவுக்கிணங்கவே வழிபாட்டுத் தலங்களுக்கு பண்டிகை நாட்களில் மக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

வைரஸ் தொற்று காலங்களில் கடன் தொல்லைலள், வியாபார பாதிப்பு ஆகியவையால் தற்கொலைகள் அதிகமாக நடைபெறுவதாகவும் அதனை தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை மையம் செயல்படுவதாகவும் தெரிவித்தார். இக்கால கட்டங்களில் கடனை திருப்பி செலுத்துவதற்கு மக்களுக்கு கால அவகாசம் தர வேண்டும் என நிறுவனங்களிடம் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க