• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 852 பள்ளி வாகனங்கள் ஆய்வு

April 27, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் உள்ள 852 பள்ளி வாகனங்கள் இன்றும், நாளையும் தர ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது என்று இன்று ஆய்வினை தொடங்கி வைத்த கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது;

“சென்னை உயர்நீதிமன்ற ஆணை படியும், போக்குவரத்து ஆணையர் உத்தரவுப்படியும் தமிழ்நாடு மோட்டார் வாகன முறைப்படுத்துதல் சிறப்பு விதிகள் 2012-ன் கீழ் மாவட்ட முழுவதும் உள்ள பள்ளி வாகனங்களின் தரத்தை ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்ளையும் தர ஆய்வு மேற்கொண்டு உறுதி செய்து கொள்ளும் விதமாக இன்று கோவை மையம், கோவை தெற்கு மற்றும் சூலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 441 பள்ளி வாகனங்களுக்கு தர ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பணிகளை மேற்கொள்ள காவல்துறை, கல்வித்துறை, போக்குவரத்துத்துறை ஆகிய துறைகள் மூலம் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு இப்பணிணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆய்வில் ஒவ்வொரு வாகனத்திலும் வாகனத்தின் தினசரி குறிப்பு புத்தகம், முதலுதவி பெட்டி, தீயணைப்புக்கருவி, அவசரக்கால வழி மற்றும் இருக்கை வசதிகள் ஆகியவை முக்கியமாக சோதனையிடப்படுகிறது.

கோவை மாவட்டத்திலுள்ள 4 வட்டார பகுதிகளில் இன்று(27.04.2017) 441 பள்ளி வாகனங்களும், நாளை(28.04.2017) 411 பள்ளி வாகனங்களும், என மொத்தம் 852 பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த ஆய்வின்போது பள்ளி வாகனங்களில் பழுதுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உடனடியாக அந்த வாகனம் திருப்பி அனுப்பப்படும். உரிய பழுதுகளை சரிசெய்து இக்குழுவில் காண்பித்த பின்னரே பள்ளியில் வாகனத்தை ஏற்க அனுமதிக்கப்படும். இதற்காக பள்ளி வாகனங்களுக்கு ஒரு வார காலம் அவகாசம் அளிக்கப்படும்.

மேலும், ஓட்டுநர்களுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு ஊக்குவிக்கப்பட உள்ளது. இதன் மூலம் விபத்துக்களை முற்றிலுமாக தவிர்த்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளப்படும்.”

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) எஸ். சரவணன், வட்டார போக்குவரத்து அலுவலர் உதயகுமார், பால்ராஜ், குமாரவேல், பாஸ்கரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள் முருகன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் வனஜா, போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க