February 1, 2020
தண்டோரா குழு
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள் இன்று கோவையில் தொடங்கியது.
கோவை மாவட்ட கராத்தே சங்கம் மற்றும் இந்துஸ்தாஸ் கலை அறிவியல் கல்லூரி இணைந்து 29வது மாவட்ட அளவிலான கரத்தே போட்டியை நடத்துகின்றன. அதன்படி, இந்த போட்டி இன்று ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் துவங்கியது.
இதில், மாவட்டம் முழுவதிலும் இருந்து 160 பள்ளிகளை சேர்ந்த ஐந்து வயதிற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்கின்றனர். 81 பிரிவுகளில் நடைபெறும் இப்போட்டிகள் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில் முதலிடத்தை பெறுபவருக்கு தங்கப்பதக்கம், இரண்டு மற்றும் மூன்றமிடங்களை பெறுவோருக்கு வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
முன்னதாக இந்த போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வரி கண்ணய்யன் பேசுகையில், “இங்கு பல பெண் குழந்தைகளை பார்க்கிறேன். அனைவரும் சிங்க பெண்களாக வர வேண்டும். இவர்களுக்கு கராத்தே கற்றுக்கொடுக்க பெற்றோரும் ஆர்வம் காட்டுவது மிகுந்த வரவேற்கத்தக்கது. அனைத்து குழந்தைகளுக்கும் தன்னைத்தானே காத்துக்கொள்ளும் திறமை இருக்க வேண்டும். வரும் காலத்தில் உலக அளவில் சாதிக்க எனது வாழ்த்துக்கள். கராத்தே போட்டியில் வெற்றி பெற்று வருவோர்களுக்கு எனது கல்லூரியில் இலவச கல்வி கொடுப்பேன்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரயின் முதல்வர் பொன்னுசாமி, மாவட்ட கராத்தே சங்க தலைவர் முத்துராஜூ மற்றும் கார்த்திகேயன், பவுல் விக்ரமன், தேவராஜ், சரங்கதரன், முத்துக்குமார் மற்றும் ரெங்கராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.