• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 8 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு

June 19, 2019 தண்டோரா குழு

கோவையில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் இருவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த மே மாதம் 14-ம் தேதி கோவை – அவிநாசி சாலையின் பரபரப்பான பகுதியில் நீதிமன்றத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வந்த கணபதியைச் சேர்ந்த பிரதீப், தமிழ்வாணன் ஆகிய இரண்டு பேரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்காக பழிக்குப் பழி வாங்குவதற்கான செயல்களில் ஈடுபட இரு தரப்பினரும் திட்டமிட்டிருந்தனர். இதையறிந்த பந்தயசாலை போலீசார், இரு தரப்பினரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய முடிவு செய்தனர். அதன்படி, தனபால், சஞ்சய் ஆகியோரை தவிர்த்து மணிகண்டன், சதீஷ்குமார், சூர்யா, ஜெகதீஷ், ராஜேஷ், ஹரி, ஹரிஹரன் மற்றும் தனபால் உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

இந்நிலையில், பட்டப்பகலில் பொதுமக்களை பீதியடையச் செய்து நடுரோட்டில் அரிவாளால் வெட்டிய குற்ற செயலுக்காகவும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் இக்கொடூரமான குற்ற செயலை தொடர்ந்து செய்வதை தடுக்கும் நோக்கத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில், 8 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க