June 29, 2018 
தண்டோரா குழு
                                கோவையில் பாலவிநாயகர் கோவில் பூட்டை உடைத்து 8 கிலோ வெள்ளி மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கோவை லிங்கப்ப செட்டி வீதியில் பாலவிநாயகர் கோவில் உள்ளது.இந்த கோவிலில் மர்ம நபர்கள் நேற்றிரவு கோவிலின் முன்கேட்டை கம்பியால்  நெம்பி பூட்டை உடைக்காமல் திறந்துள்ளனர். இதனையடுத்து உள்ளே இருந்த கேட்டையும் கம்பியால் நெம்பி திறந்துள்ளனர்.சாமியின் நகை மற்றும் பணம் வைத்திருந்த அறைக்கு முன்பு இருந்த சேர் வைத்து தாண்டி குதித்து பீரோவை கம்பியால் நெம்பியுள்ளனர். பீரோவினுள் இருந்த சாமிக்கு அணிவிக்கக்கூடிய 8 கிலோ வெள்ளி ஆபரணங்கள் மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச்சென்றனர். 
இதனையடுத்து இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து ஆர்.எஸ்.புரம் குற்றத்தடுப்பு காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.சம்பவ இடத்திற்கு வந்த துணை ஆணையர் பெருமாள் மற்றும் தடய அறிவியல் துறையினர் கைரேகைகளை எடுத்துச்சென்றனர்.காவல் துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.