June 4, 2018
தண்டோரா குழு
கோவையில் புதிய சாய தொழிற்சாலை திறப்பதினால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் இன்று(ஜூன் 4)மனு அளித்தனர்.
கோவை காரமடை ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளியங்காடு வன பகுதியை ஒட்டி அரோமா பார்ம்ஸ் என்ற பெயரில் புதிய சாய தொழிற்சாலை நிறுவப்பட்டு வருகிறது.இந்த ஆலையில் இருந்து வெளி வரும் கழிவு நீர் மற்றும் விஷ வாயுவால் அருகில் உள்ள அத்திக்கடவு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள விலங்குகள்,விவசாய நிலங்கள்,பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாவர்கள்.இதனால் அரோமா தொழிற்சாலையை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வெள்ளியங்காடு பஞ்சாயத்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.