December 4, 2020
தண்டோரா குழு
கோவை ஆர் எஸ் புரத்தில் செந்தில் குமார் என்பவர் Pure India என்ற பெயரில் தண்ணீர் சுத்திகரிப்பு உதிரிபாகங்கள் மொத்த வியாபாரம் மற்றும் காட்டன் இந்தியா என்ற பெயரில் ஆண்களுக்கான துணிக்கடை நடத்தி வருகிறார்.
அதைப்போல் இவருடைய Pure India என்ற நிறுவனம் கோவை துடியலூர் அப்பநாயக்கன் பாளையம் பகுதியில் இருக்கிறது. இங்கு வீரபெருமாள் ( 42 ) லட்சுமணன் என்பவர் பல வருடங்களாக மேலாலளர் பதவி வகித்து வந்ததாகவும் மேற்கண்ட மேலாலளர் பதவியினை தனக்கு சாதகமாக பயன்படுத்தி Aqua Pure என்ற பெயரில் தன்னுடைய விலாசத்திலேயே போலியான ரசீது புத்தகங்கள் தயார் செய்து செந்தில் குமார் என்பவர் நிறுவனத்தில் உள்ள பொருட்களையே எடுத்து அதற்கு போலியான ரசீது வழங்கி பல ஆண்டுகளாக பல தருணங்களில் வியாபாரம் செய்து ருபாய் 75 லட்சங்கள் மோசடி செய்ததாக நடவடிக்கை வேண்டி புகார் மனு அளித்திருந்தார் .
இந்நிலையில் புகார் தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது .கோவை மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவின் பேரில் கோவை மாநகர துணை ஆணையர் ( குற்றப்பிரிவு ) மேற்பார்வையில் மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையில் காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு எதிரிகளை தேடிவந்தநிலையில் மேற்படி எதிரியை கோவை சாய்பாபா காலனியில் தனது அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.