January 25, 2021
தண்டோரா குழு
நாளை இந்தியா முழுவதும் 72 -வது குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி கோவை மாநகர் முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியான காந்திபுரம் டவுன், சென்ட்ரல், திருவள்ளுவர் பேருந்து நிலையங்களிலும், கிராஸ்கட் ரோடு, 100 அடி சாலை, உக்கடம் பேருந்து நிலையம், ரயில் நிலையம், விமான நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பகுதிகளிலும், ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, காந்தி பார்க் பகுதி ஆகிய பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ரயில்நிலையத்தில் இருந்து வரக்கூடிய பயணிகள் முழுமையாக சோதனைக்குப் பிறகே அனுப்பப்படுகின்றன. அதேபோல சோதனை சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வரக்கூடிய அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இந்தநிலையில் நாளை கோவை மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் கோவை வ.உ.சி மைதானத்தில் காலை 8 மணி அளவில் குடியரசு தின விழா நடைபெறுகிறது. கலெக்டர் ராசாமணி போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
மோப்ப நாய்களின் உடைய சாகசங்கள் போலீசாரின் சாகசங்களும் செய்து காட்டப்படுகிறது.தியாகிகள், முதியோர், சமூக சேவையாளர்கள்,பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கி குடியரசு தின விழா உரையாற்றுகிறார். கடந்த ஆண்டு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த நபர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்குகிறார். குறிப்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்பட 1.400 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி றார்.
கோவை மாநகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளை குடியரசு விழாவிற்கு வரக்கூடிய பொதுமக்கள் மாணவிகள் அனைவருமே மாஸ்க் அணிந்து இருக்க வேண்டும். சனிடைசர் பயன்படுத்திய பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். சமூக இடைவெளியை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என பல்வேறு விதமான அரசு சுகாதார கட்டுப்பாடுகளுடன் நாளை குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது.