• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 72 மாணவ,மாணவியர் தொடர்ந்து 72 நிமிடம்,72 நொடிகள் சிலம்பம் சுற்றி சாதனை

February 1, 2021 தண்டோரா குழு

கோவையில் சிலம்பம் கலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆர்.ஜி.ஏ.அகாடமியை சேர்ந்த 72 மாணவ,மாணவியர் தொடர்ந்து 72 நிமிடம்,72 நொடிகள் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர்.

கோவை ஆர்.ஜி.ஏ.பயிற்சி மையம் சார்பாக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம் உட்பட தற்காப்பு கலைகளை கடந்த ஐந்து வருடங்களாக இலவசமாக பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிலம்பம் கலையை மாணவ, மாணவிகளிடையே கொண்டு சேர்க்கும் விதமாக இந்த மையத்தை சேர்ந்த பயிற்சியாளர்கள் ஆறுமுகம், கோவிந்தராஜ்,சேகர் மற்றும் நந்தகுமார் ஆகியோரின் தீவிர முயற்சியில், சிலம்பம் விளையாட்டிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டி,72 மாணவ,மாணவியர்கள் இணைந்து 72 நிமிடங்கள் 72 நொடிகள் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.

கோவை பீளமேடு புதூர்,கருணாநிதி நகரில் நடைபெற்ற இந்த சாதனை நிகழ்ச்சியை, ஆர்.ஜி.ஏ.தற்காப்பு கலைகள் இலவச அகாடமி மற்றும் கிராமிய புதல்வன் அகாடமி ஆகியவை இணைந்து நடத்தின.இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த நான்கு வயது முதல் துவங்கி 18 வயது வரையிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பாரம்பரிய சிலம்ப கலையை மீட்டெடுக்கும் விதமாக பள்ளி மாணவ-மாணவிகள் இந்த சாதனை ஃபீனிக்ஸ் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு கிராமிய புதல்வன் அகாடமியின் தலைவரும்,ஃபீனிக்ஸ் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தின் நிறுவனருமான டாக்டர் கலையரசன் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சியில் அழகரசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க