July 4, 2020
தண்டோரா குழு
கோவையில் இன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 74 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கோவையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 74 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
அதன்படி கோவை குனியமுத்தூர், குறிச்சி, போத்தனூர் பகுதியில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதைப்போல், கோவை மயில்கள் நியூயார்க் அவென்யூ அருகில் உள்ள அழகு நகரை 3 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.மேலும், செல்வபுரம் பகுதியில் 13 பேர், தொண்டாமுத்தூர் பகுதியில் 8 பேர், போத்தனூர், நஞ்சுண்டாபுரம் பகுதியில் 7 பேர், பீளமேடு பகுதியில் 4 பேர், விளாங்குறிச்சி 1, இஎஸ்ஐ மருத்துவமனையில் 13 பேர், அரசு மருத்துவமனையில் 2, துடியலூர் 1, பொள்ளாச்சி 1, விமானநிலையம் 6 என மொத்தம் 74 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 712 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் இ.எஸ்.ஐ மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.