• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 7 பேர் வீடுகளில் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை

June 12, 2019 தண்டோரா குழு

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுடன் சமூகவலைதளங்களில் தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் கோவையில் 7 பேர் வீடுகளில் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

இலங்கை தேவாலயத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களுடன் இவர்களுக்கு கோவையை சேர்ந்த சிலருக்கு சமூகவலைதளங்களில் தொடர்பு இருப்பது தேசியபாதுகாப்பு முகமை அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.இதனைதொடர்ந்து கோவை உக்கடம் அன்புநகர், குனியமுத்தூர் உட்பட 7 இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் இன்று காலை சோதனையில் ஈடுபட்டனர்.

காலை 6 மணி முதல் இந்த சோதனையானது துவங்கி நடந்து வருகின்றது.கொச்சியில் இருந்து வந்த தேசிய பாதுகாப்பு முகமை டி.எஸ்.பி விக்ரம் தலைமையிலான அதிகாரிகள் மற்றும் , கோவையில் உள்ள தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை போத்தனூரில் உள்ள சதாம், அக்பர், அக்ரம்ஜிந்தா ஆகியோர் வீடுகளிலும், உக்கடம் அன்புநகர் பகுதியில் உள்ள அசாருதீன், குனியமுத்தூர் அபிபக்கர்சித்தக் ஆகியோர் வீடுகளிலும், அல்அமீன்காலனியை சேர்ந்த இதயதுல்லா, சாகிம்ஷா ஆகிய 7 பேர் வீடுகளில் சோதனையானது நடத்தப்பட்டு வருகின்றது.

தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளுக்கு பாதுகாப்பாக கோவை மாநகர காவல்துறையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க