April 6, 2021
தண்டோரா குழு
தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 531 ஆண்கள், 15 லட்சத்து 52 ஆயிரத்து 799 பெண்கள், 414 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 30 லட்சத்து 62 ஆயிரத்து 744 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். பத்து தொகுதிகளிலும் 4427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 65 சுயேட்சை வேட்பாளர்களுடன் சேர்த்து 137 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றனர். இதில் 126 ஆண் வேட்பாளர்கள், 11 பெண் வேட்பாளர்கள் இடம்பெற்றனர். இதில் அதிகபட்சமாக கோவை தெற்கு, சிங்காநல்லூர் தொகுதகிளில் தலா 21 பேரும், கோவை வடக்கு தொகுதியில் 20 பேரும் போட்டியிட்டனர்.
இதனிடையே காலை 7 மணிக்கு கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவு துவங்கயதில் இருந்தே மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். மதியம் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாக்களித்தனர். மாலை 7 மணிக்கும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு நிலவரம் : காலை 9 மணி
மேட்டுப்பாளையத்தில் 6.44 , சூலூரில் 6.66 , கவுண்டம்பாளையத்தில் 6.21 , கோவை வடக்கில் 7.11, தொண்டாமுத்தூர் 7.77, கோவை தெற்கு 8.77, சிங்காநல்லூர் 9.08, கிணத்துக்கடவில் 13.54, பொள்ளாச்ச்சி 14.19, வால்பாறையில் 10.65 என மொத்தம் சராசரியாக 8. 74 சதவீதம் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவு நிலவரம் : காலை 11 மணி
மேட்டுப்பாளையத்தில் 16.41 , சூலூரில் 24.22 , கவுண்டம்பாளையத்தில் 18.03 , கோவை வடக்கில் 19.21, தொண்டாமுத்தூர் 24.09, கோவை தெற்கு 22.96, சிங்காநல்லூர் 16.40, கிணத்துக்கடவில் 28.21, பொள்ளாச்ச்சி 28.86, வால்பாறையில் 14.09 என மொத்தம் சராசரியாக 21. 13 சதவீதம் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவு நிலவரம் : மதியம் 1 மணி
மேட்டுப்பாளையத்தில் 33.88 , சூலூரில் 42.76 , கவுண்டம்பாளையத்தில் 36.89 , கோவை வடக்கில் 35.16, தொண்டாமுத்தூர் 43.12, கோவை தெற்கு 36.80, சிங்காநல்லூர் 40.75, கிணத்துக்கடவில் 43.54, பொள்ளாச்ச்சி 47.03, வால்பாறையில் 37.44 என மொத்தம் சராசரியாக 39.56 சதவீதம் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவு நிலவரம் : மதியம் 3 மணி
மேட்டுப்பாளையத்தில் 51.79 ,சூலூரில் 56.37 , கவுண்டம்பாளையத்தில் 53.84,கோவை வடக்கில் 47.72, தொண்டாமுத்தூர் 49.55,கோவை தெற்கு 46.89, சிங்காநல்லூர் 49.17, கிணத்துக்கடவில் 55.85, பொள்ளாச்ச்சி 59.17, வால்பாறையில் 45.23 என மொத்தம் சராசரியாக 51.74 சதவீதம் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவு நிலவரம் : மாலை 5 மணி
மேட்டுப்பாளையத்தில் 59.83 , சூலூரில் 67.95 , கவுண்டம்பாளையத்தில் 60.31 , கோவை வடக்கில் 53.50, தொண்டாமுத்தூர் 64.66, கோவை தெற்கு 55.44, சிங்காநல்லூர் 56.41, கிணத்துக்கடவில் 64.24, பொள்ளாச்ச்சி 71.48, வால்பாறையில் 63.17 என மொத்தம் சராசரியாக 61.38 சதவீதம் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவு நிலவரம் : இரவு 7 மணி
மேட்டுப்பாளையத்தில் 75.16, சூலூரில் 75.49 , கவுண்டம்பாளையத்தில் 66.11,கோவை வடக்கில் 59.08, தொண்டாமுத்தூர் 71.04,கோவை தெற்கு 60.72, சிங்காநல்லூர் 61.68, கிணத்துக்கடவில் 70.30, பொள்ளாச்ச்சி 77.28, வால்பாறையில் 70.10 என மொத்தம் சராசரியாக 68.32 சதவீதம் பதிவாகியுள்ளது.
வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் அரசியல் கட்சி முகவர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல்வைக்கப்பட்டு கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்ப கல்லூரிக்கு எடுத்துச்செல்லப்பட்டு காப்பு அறையில் வைக்கப்பட்டடு அறை சீல் வைக்கப்பட்டது.
கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது கோவை மாவட்டத்தில் 68.13 சதவீதம் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மேட்டுப்பாளையத்தில் 75.52 ,சூலூரில் 75.61 , கவுண்டம்பாளையத்தில் 66.45 , கோவை வடக்கில் 62.09, தொண்டாமுத்தூர் 66.99, கோவை தெற்கு 62.59, சிங்காநல்லூர் 61.89, கிணத்துக்கடவில் 70.02, பொள்ளாச்ச்சி 77.74, வால்பாறையில் 73.09 சதவீதம் பதிவாகியிருந்தது.