April 19, 2020
தண்டோரா குழு
கோவையில் 6 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
கோவை கோவில்மேடு பகுதியை சேர்ந்தவர் திவ்யா.இவருக்கு 6 வயதில் அபிஷேக் என்ற மகனும்,3 வயதில் ஒரு மகளும் உள்ளனர். முதல் கணவரான அருண்னை பிரிந்து திவ்யா, கார் ஒட்டுநரான ராஜதுரை என்பவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அபிஷேக்கிற்கு உடல் நிலை சரியில்லை என ஆம்புலன்ஸ்க்கு அழைத்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அபிஷேக்கின் உடல் முழுக்க காயங்கள் இருந்த நிலையில் பரிசோதனை செய்து பார்த்த போது, சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அபிஷேக்கின் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக சாய்பாபா காலணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறும்பு செய்த சிறுவனை அடித்ததினால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ராஜதுரை மற்றும் திவ்யா ஆகியோரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.