March 15, 2021
தண்டோரா குழு
வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் தேர்தல் செலவினங்களை மேற்பார்வையிட கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 6 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன் படி, மேட்டுப்பாளையம் தொகுதிக்கு அமிதாப் ஷா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவரது தொலைபேசி எண்- 94899 – 46723. சூலூர் மற்றும் தொண்டாமுத்தூர் தொகுதிகளுக்கு மகேஷ் ஜி. ஜிவாடே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவரது தொலைபேசி எண் -94899 – 46724. கவுண்டம்பாளையம் மற்றும் கோவை வடக்கு தொகுதிகளுக்கு விஜய் குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி எண்- 94899 – 46725. கோவை தெற்கு தொகுதிக்கு ஷஷாங் திவேதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அவரது தொலைபேசி எண்- 94899 – 46726. சிங்காநல்லூர் மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளுக்கு ஹித்தேந்திர பௌராவ்ஜி நினவே நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி எண்- 94899 – 46727. பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதிகளுக்கு ராம் கிருஷ்ண் கேடியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது தொலைபேசி எண்- 94899 – 46728.