• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 6 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பலத்த பாதுகாப்பு

August 23, 2019 தண்டோரா குழு

லஷ்கர்-இ-தைபா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் கோவையில் ஊடுருவி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

லஷ்கர்-இ-தைபாவின் ஆறு உறுப்பினர்கள் குழு இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியுள்ளதாகவும் அவர்கள் கோவையில் குடியேறியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து

கோவைக்கு நள்ளிரவு முதல் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தனை சேர்ந்த இலியாஸ் அன்வர்
என்றும் மற்றவர்கள் இலங்கை தமிழர் இஸ்லாமியர்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கோவையில் இவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருக்க கூடும் என்ற அடிப்படையில் நேற்று நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சோதனை சாவடிகளில் வான தணிக்கை மற்றும் இருசக்கர , நான்கு சக்கர வாகனங்கள் பேட்ரோல், மக்கள் கூடும் இடங்களில் காவல் துறையினர் சீருடையிலும், மப்டியிலும் கண்காணிப்பு போன்ற பணிகளில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாநகரில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது மட்டுமின்றி மோப்ப நாய் பிரிவு, வெடி குண்டு மீட்பு பிரிவு, காவல் விரைவு தகவல் பிரிவு மற்றும் அனைத்து உளவுத்துறை பிரிவுகளும் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபப்ட்டுள்ளனர். இதே போல மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போதிய பாதிகாப்பு போடப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவ, சந்தேகிக்கும் வகையில் யாராவது தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க