• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 57-ம் ஆண்டு பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் – ஆகஸ்ட் 26ல் துவக்கம்

August 24, 2023 தண்டோரா குழு

கடந்த 56 ஆண்டுகளாக பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு 57-வது கூடைப்பந்து போட்டிகள் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகின்றது.

இதுகுறித்து பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் .எல். கோபால கிருஷ்ணன், பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப், தலைவர் டாக்டர். ருத்ரமூர்த்தி மற்றும் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் பழனிசாமி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள்,

இவ்வாண்டு 57-வது ஆண்கள் பி.எஸ்.ஜி. கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் வரும் ஆகஸ்டு 26 ம் தேதி முதல் 30- ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் அனுமதியடனம்,தமிழ்நாடு கூடைப்பந்துகழக குறியீட்டு எண்ணுடனும் நடைபெறவுள்ளது.

இந்திய அளவில் புகழ்பெற்ற இந்த போட்டியில் பங்கு பெற்று விளையாட எல்லா அணிகளும் ஆர்வமாக இருப்பார்கள். இதில் அகில இந்திய அளவில் மிகச்சிறந்த 8 ஆண்கள் அணி தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு முதல் மூன்று நாட்கள் சூழல் முறையிலும், பின்பு ஒவ்வொரு முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் அறையிறுதிக்கு தகுதி பெறும் அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் விளையாடுவார்கள்.

பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் அணியில் இந்திய கப்பல் படை அணி -லோனாவாலா, பேங்க் ஆஃப் பரோடா அணி – பெங்களூரு, இந்திய இராணுவ அணி – புது தில்லி, இந்தியன் வங்கி அணி – சென்னை, வருமாண வரி துறை அணி – சென்னை, சுங்க வரி அணி புனே, கேரளா மாநில மின்சார வாரிய அணி – திருவனந்தபுரம் கேரளா போலீஸ் அணி – திருவனந்தபுரம் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

வெற்றி பெறுகின்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.1,00,000.00 மற்றும் பிஎஸ்ஜி சுழல் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50,000.00 மற்றும் கோப்பை, அரையிறுதிப் போட்டியில் மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூ.20,000.00 மற்றும் நான்காம் இடம் பெறும் அணிக்கு 15,000.00 மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10,000.00 பரிசாக வழங்கப்படும்.
என்றனர்.

மேலும் படிக்க