• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 558 மில்லி மீட்டர் மழை பதிவு

July 16, 2018 தண்டோரா குழு

கோவையில் தொடர்ந்து அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து கோவையில் பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது.இந்நிலையில் இன்று அதிகாலை முதல் காந்திபுரம்,பீளமேடு,ராமநாதபுரம்,சிங்காநல்லூர் உள்ளிட்ட மாநகர பகுதிகளிலும்,துடியலூர்,கிணத்துக்கடவு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் அதிகாலை முதலாக மழை பெய்து வருகிறது.

இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் அலுவலகம் செல்வபர்கள் கடும் சிரமத்திற்குள்ளகினர்.நாளையும் இதே அளவு மழை நீடிக்கும் என தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் உள்ள காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மேலும்,இந்தாண்டு கோவையில் 209 மில்லி மீட்டர் தென் மேற்கு பருவமழை பெய்யும் என எதிர்பாத்த நிலையில்,தற்போது மழை பொழிவு அதிகரித்து இருப்பதால் கோவைக்கு எதிர்பார்த்ததை விட அதிகளவு பருவ மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.காற்றின் வேகம் அதிகாரித்து இருப்பதால் விவசாயிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் இதுவரை 558 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.குறைந்தபட்சமாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக பகுதியில் 3 மில்லி மீட்டர் மழையும்,அதிகபட்சமாக சின்னகல்லாறு பகுதியில் 188 மில்லி மீட்டர் மழையளவும் பதிவாகி உள்ளது.

கோவை குற்றாலம் மற்றும் சிறுவாணி பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய தொடர் மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவியில்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு அங்காங்கே மரங்களும் முறிந்து விழுவதால்,பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை விதித்து இருந்த தடையை நீடித்துள்ளது.மேலும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் இன்னும் சில தினங்களில் மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க