• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 550 கிலோ எடையிலான பிரம்மாண்ட பிளம் கேக் தயாரிக்கும் பணிகள் துவக்கம்

October 4, 2023 தண்டோரா குழு

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை என்றாலே,நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்களிடையே அன்பை வெளிப்படுத்தவும் வேறுபாடுகளின்றி அனைவரும் கேக் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

இந்நிலையில் கிறிஸ்துமஸிற்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர விடுதிகளில் பிளம் கேக் தயாரிக்கும் பணி துவங்கி உள்ளது.இதன் ஒரு பகுதியாக கோவை அவினாசி சாலையில் உள்ள, ரெசிடென்சி ஓட்டலில்,கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது.

இதில் கேக் தயாரிக்க 550 கிலோ எடையிலான முந்திரி,உலர் திராட்சை, அத்திப்பழம், பாதாம், வால்நட் உள்ளிட்ட 20 வகையான உலர் பழங்கள் மற்றும் ஒயின் உள்ளிட்ட பழ ரசங்களை ஊற்றி கலக்கும் கேக் மிக்சிங் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ரெசிடென்சி சமூக ஆர்வலர்கள்,ஊழியர்கள் உட்பட பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இது குறித்து ரெசிடென்சி ஓட்டலின் செயல் இயக்குனர் சார்லஸ் ஃபேபியன் மற்றும் தலைமை சமையல் கலை வல்லுனர் முகம்மது ஷமீம் ஆகியோர் கூறுகையில்,

ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை குடும்ப விழாவாக கொண்டாடுவதாகவும், இந்த ஆண்டு ஐநூறு கிலோ கேக் தயாரிப்பதற்கான உலர் பழங்கள் கலவை பணிகளை அனைவரும் இணைந்து செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க