• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 55 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் – ரூ.1500 கோடி உற்பத்தி இழப்பு

December 20, 2021 தண்டோரா குழு

மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து கோவையில் 55 ஆயிரத்திற்கு மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் ஸ்டீல் மற்றும் தொழிற்சாலைகள் சார்ந்த மூலப்பொருட்களான காப்பர், அலுமினியம், பேப்பர், பிளாஸ்டிக், சி.ஆர். சீட், ஸ்கிராப் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் உற்பத்தி சார்ந்த தொழிலகங்கள் ஏற்கனவே ஆர்டர்களை செய்ய முடியாமல் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்த வேண்டு நாடு முழுவதும் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்னிறுத்தின. ஆனால், இதுவரை விலையேற்றம் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

இந்த நிலையில்,நாடு முழுவதிலும் உள்ள 200 சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இணைந்து இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கோவையில் மட்டும் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. கொடிசியா, டேக்ட், காட்மா, கொசிமா, கௌமா உள்ளிட்ட பல்வேறு தொழில் அமைப்புகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. இதனால், மாவட்டத்தில் சுமார் ரூ.1500 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கோவையில், சுந்தராபுரம், ஆவாரம்பாளையம், பீளமேடு, இடையர்பாளையம், நீலம்பூர் ஆகியவை தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ள இடங்களாக உள்ளன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் தொழிலகங்கள் முழுமையாக அடைக்கப்பட்ட சூழலில், எப்போதும் பரபரப்பாக காணப்படும் இப்பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

மேலும் படிக்க