• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 5300க்கு மேற்பட்ட ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தயார் – மாவட்ட ஆட்சியர்

January 10, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 5300க்கு மேற்பட்ட ஆக்ஸிஜன் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் கொரோன வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மருத்துவத்துறை தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது:

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் 9800 படுக்கை வசதிகள் கொரோனா நோய் தொற்றிற்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளன.

இதில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களில் 4300க்கு மேற்பட்ட படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 5300க்கு மேற்பட்ட ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளும், 129 கிலோ லிட்டர் திரவ ஆக்ஸிஜன் கொள்கலன், 31 ஆக்ஸிஜன் உற்பத்தி இயந்திரங்கள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

மேலும் சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருத்துவ உபகாரணங்களும் சரியான நிலையில் இயங்குவதை மருத்துவர்கள் உறுதி செய்ய வேண்டும். 24 நான்கு மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்றிடும் வகையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்கப்பட வேண்டும். கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கோவை மண்டலத்தில் உள்ள அண்டை மாவட்டங்களில் இருந்து வருபவர்களுக்கும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா தொற்று எண்ணிக்கை மற்றும் குணமடைந்தோர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய தினசரி அறிக்கையினை அரசு மருத்துவமனை டீன் வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் ரவீந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா, துணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) அருணா மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கொரோனா தொற்று கட்டளை மையத்தில் ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க