June 29, 2021
தண்டோரா குழு
கோவையில் 500 மலைகிராம குடும்பத்தினருக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வனத்துறை அமைச்சர் இராமசந்திரன் வழங்கினார்.
கோவை காருண்யா பல்கலைகழகம் சார்பாக மலைகிராம மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் வனத்துறை அமைச்சர் இராமசந்திரன் கலந்து கொண்டு 500 மலைகிராம மக்களுக்கு தையல் மிஷின்,அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.
இதை தொடர்ந்து சீஷா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு முதல்வர் காப்பீட்டு சேவையை துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து பேசிய வனத்துறை அமைச்சர் இராமசந்திரன்,
கொரோனா காலத்தில் தடுப்பூசி மிக அவசியமான ஒன்று,நீலகிரி மாவட்டத்தில் அனைத்து மலைவாழ் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இது விழிப்புணர்வு முன் உதாரணமாக உள்ளது. அனைவருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இது வரை தமிழகத்தில் கொண்டு வந்த பல்வேறு முக்கிய திட்டங்களையும் திமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது.
தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள் கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டால், திமுக ஆட்சியில் மட்டுமே மிக முக்கயமான திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தியது தெரியும்.தமிழகம் மிக நெருக்கடியான காலகட்டத்தில் இருந்த போது முதல்வர் பொருப்பை ஸ்டாலின் ஏற்க்கொண்டார்.அதன் பின்னர் பல்வேறு தடுப்பு பணிகளை அயராது செய்து வருகிறார்.கோவை மாவட்டத்தில் 5 ஆயிரம் என தினசரி பாதிப்பு இருந்த நிலையில் தற்போது, வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
கோவை வந்த முதல்வர் நேரடியாக பாதுகாப்பு உடையணிந்து,கொரோனா சிகிச்சை மையத்திற்குள் சென்று ஆய்வு மேற்கொண்டு இந்தியாவில் உள்ள பிற மாநிலத்திறகு முன் உதாரணமாக திகழ்ந்தார் என பேசினார்.