June 11, 2021
தண்டோரா குழு
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட குறிச்சியில் 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார்.
கோவை கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட குறிச்சி பகுதியில் திமுக சார்பாக 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, மளிகை மற்றும் அரசு சார்பில் 15 பொருட்கள் அடங்கிய கொரோனா நிவாரண பொருட்களையும் சேப்பாகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சக்கரபாணி, இராமச்சந்திரன், புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி,மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.