• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 5 வயது சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

March 18, 2020

கோவையில் 5 வயது சிறுவனுக்கு ஜெம் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை குழு, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த 5 வயது சிறுவன் பிறந்ததிலிருந்தே கல்லீரல் கொலஸ்டாசிஸ் நோயால் அவதிப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கோவை ஜெம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன், ஆரம்பத்தில் மருத்துவ சிகிச்சையில் குணமான நிலையில், பின்னர் உடல்நிலை மோசமடைந்து மருத்துவ சிகிச்சைகளும் தோல்வியுற்றது, தொடர்ந்து சிறுவனைக் காப்பாற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் தாயின் கல்லீரலின் ஒரு பகுதி லாபாஸ்கோபிக் முறை மூலம் எடுக்கப்பட்டு டாக்டர் சுவாமிநாதன், ஆனந்த் வியாஜி, விக்னேஷ், பிரபாகரன் ஆகிய மருத்துவர் குழு , தமிழக முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 5 வயது சிறுவனக்கு மாற்றுஅறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டு சாதனையை படைத்தனர்.

ஐந்து வயது சிறுவனக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த கல்லீரல் நிபுணர்க்கு ஜெம் மருத்துவ மனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

மேலும் படிக்க