• Download mobile app
23 Dec 2025, TuesdayEdition - 3604
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ‘4 பேர் 4 விதமா’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது !

June 19, 2019 தண்டோரா குழு

பிரபல நடிகர்கள் நடிக்க சிவா விஆர்கே கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 4 பேர் 4 விதமாக எனும் திரைப்படத்தின் துவக்க விழா பூஜை கோவை மருதமலை முருகன் கோவிலில் நடைபெற்றது.

சிவா விஆர்கே கிரியேஷன்ஸ் தயாரிக்க ADB வினோத்ராம் குமார் இயக்கத்தில் 4 பேர் 4 விதமா” என்ற புதிய படத்தின் பூஜை துவக்க விழா கோவையில் நடைபெற்றது. சதீஷ் ஒளிப்பதிவு செய்ய கிருஷ்ணா இசை அமைக்கும் இப்படத்தில் கானா பாலா பாடல்கள் எழுத,உமேஷ் நடனம் அமைக்கிறார். பல முன்னணி இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றிய வினோத் ராம் குமார் இயக்கும் இப்படத்தில்,பிரபல நடிகர்கள், கோவை ரங்கராஜ்,ரதி. விஜயசாந்தி. கோவை சாரதா. ஜில்லா பாஸ்கர், சின்ன கோவை சரளா என்கிற பாண்டி ரத்னா ஆகியோருடன் . கோவை மனோகர். சாய்ராஜன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.
இப்படத்திற்கான துவக்க விழா பூஜை கோவை மருதமலை முருகன் கோவிலில் நடைபெற்றது. விழாவில் மலையாள திரைப்பட இயக்குனர் பி.எஸ் சசிதரன் அவர்கள் கலந்துகொண்டு படக்குழுவினர்கள் அனைவரையும் வாழ்த்தினார்.

விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் வினோத் ராம் குமார்,

சமூகத்தில் எந்த ஒரு செயலையும் செய்ய தனிமனிதன் படும்பாட்டையும் அதை எப்படி சாமாளிக்க சமூகத்திடம் எப்படி தன்னை வேறுபடுத்துகிறான் என்பதை மையமாக கொண்டு உருவாகும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்..

கோவை சங்க தலைவர் முத்துக்குமார் மேற்கொள்ளும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவையில் துவங்கி காரமடை பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க