May 25, 2021
தண்டோரா குழு
கோவையில் கடந்த 4 நாட்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 14 பேரின் உடல் தமுமுக சார்பில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை அவரவாின் மதநம்பிக்கை அடிப்படையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அமைப்பு சார்பில் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி,கோவை மாவட்டத்தில் இதுவரை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தால் அவரவாின் மதநம்பிக்கை அடிப்படையில் 220 போ் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்நிலையில்,கோவையில் பல்வேறு மருத்துவமனையில் (21-5-21 முதல் 24-5-21 வரை) கொரோனா தொற்றால் உயிாிழந்த 14 நபா்களை கோவை வடக்கு மாவட்ட தமுமுக நிா்வாகிகள் நல்லடக்கம் செய்துள்ளனர்.
நேற்று 24.5.2021மட்டும் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ, மதத்தை சேர்ந்த 5 நபர்களை நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கொரோனாவால் உயிாிழக்கும் நபா்களை இறுதி மாியாதையுடன் நல்லடக்கம் செய்ய தமுமுக மருத்துவ சேவை அணியை அனுக்கலாம்..
தொடா்புக்கு – 7871201322