• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 4ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை – உறவினருக்கு தர்ம அடி, போக்சோவில் கைது

January 19, 2022 தண்டோரா குழு

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் சபரி(35). இவரது உறவினர்கள் கோவை மாவட்டம் கோவில்மேடு பகுதியில் வசித்து வரும் நிலையில் உறவினரின் 8 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் பேசி கடந்த 9ம் தேதி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து நேற்று சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். சிறுமி அதனை மறுத்திடவே தொடர்ந்து வற்புறுத்தி உள்ளார். மேலும் அருகில் இருந்த சிறுமியின் உறவினர்களிடம் சிறுமியை தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார். இதனால் சபரிக்கும் சிறுமியின் உறவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படுத்துள்ளது.

இதனிடையே சிறுமி தனது உறவினர்களிடம் சபரி பாலியல் தொல்லை அளித்ததை தெரிவித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சபரியை தர்ம அடி அடித்து துடியலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். புகாரின் பேரில் சபரியின் மீது போக்சோ வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சபரியை சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க