• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 3651 வாக்குப் பதிவு மையங்கள்

March 14, 2017 தண்டோரா குழு

உள்ளாட்சித் தேர்தலுக்கு கோவை மாவட்டத்தில் மொத்தம் 2809 வார்டுகளுக்கு 3651 வாக்குப் பதிவு மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்குச் சாவடி மையங்களுக்கான பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசியதாவது;

“கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலின்போது பொதுமக்கள் எளிதில் வாக்களிக்கும் வகையில் அவரவர் அருகில் வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கும் வகையில் கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு 1197 வாக்குச் சாவடி மையயங்களும், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய மூன்று நகராட்சிகளில் உள்ள 90 வார்டுகளுக்கு 227 வாக்குச் சாவடி மையங்களும், 37 பேரூராட்சிகளில் உள்ள 585 வார்டுகளுக்கு 742 மையங்களும், 228 கிராம ஊராட்சிகளில் 2034 வார்டுகளுக்கு 1485 மையங்களும் என மொத்தம் 2809 வார்டுகளுக்கு 3651 வாக்குப் பதிவு மையங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

வாக்குப் பதிவு மையங்களின் மாற்றங்கள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தகவல் மற்றும் விளக்கங்களைத் தெரிவிக்க விரும்பினால் வரும் 20-ம் தேதிக்குள் தங்கள் பகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியல் விவரம் குறித்து தங்கள் பகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம்”

இவ்வாறு ஹரிஹரன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன் சங்கர்ராஜா, வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பி.ஹெச். முருகன், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க