August 13, 2018
கோவைசரவணம்பட்டியில் 3 மாத பெண் குழந்தையை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்த கார்த்திக், வனிதா தம்பதியினரின் 3 மாத குழந்தை கவிஸ்ரீ. இந்நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என கார்த்திக் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி காவல்துறையினர் தீவிர தேடுதல் விசாரணையில் ஈடுபட்டனர்.அப்போது வீட்டிலிருந்து 250 அடி தூரத்தில் துணியால் சுற்றப்பட்டு இறந்த நிலையில் குப்பைத்தொட்டியில் இருந்து குழந்தையின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குழந்தையை தாயே கொன்றது அம்பலமானது. ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருப்பதால் 2வதும் பெண் குழந்தை பிறந்ததாக குழந்தை கவிஸ்ரீயை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.