• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 3 நாட்கள் நடைபெறும் இந்தியாவின் மிகப்பெரிய குளோபல் சோலார் கண்காட்சி துவக்கம்

September 11, 2025 தண்டோரா குழு

வீடுகள்,தொழில்துறை மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான அணைத்து வகை சோலார் கட்டமைப்புகள் குறித்த 2 நாள் கண்காட்சி கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில் இன்று துவங்கியது.

‘இ.கியூ. மேக் ப்ரோ’ மற்றும் ‘சி 2 ஜி’ நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த ‘குளோபல் சோலார் கண்காட்சி’ மற்றும் கருத்தரங்கு மேற்கு தமிழகத்தின் மிகப்பெரிய சோலார் கண்காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சோலார் தகடுகள் உற்பத்தியாளர்கள், சோலார் இன்வர்ட்டர் மற்றும் பேட்டரி தயாரிப்பு நிறுவனங்கள் உள்பட ஒட்டுமொத்த சோலார் துறை சார்ந்த நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளை காட்சி படுத்தியுள்ளனர்.

இன்று – செப்டம்பர் 11 மற்றும் நாளை – 12 நடைபெறும் இந்த நிகழ்வை இந்திய சோலார் சங்க தலைவர் நரசிம்மன், நிகழ்ச்சியின் அமைப்பாளர் ஆனந்த் குப்தா மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.

75க்கும் அதிகமான நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் தங்கள் தயாரிப்புகளை காட்சி படுத்தி உள்ளனர். இதில் அதானி சோலார், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ ஸ்பார்க் நிறுவனம், பானாசோனிக், ஹாவல்ஸ் , பொலிகாப் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களின் ஸ்டால்கள் அமைத்து தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தினர்.

சூர்யகான் எனும் பெயரில் நடைபெறும் சோலார் தொடர்பான கருத்தரங்கில், 50க்கும் அதிகமான துறைசார்ந்த வல்லுநர்கள் பேசுகின்றனர்.

மேலும் படிக்க