• Download mobile app
26 Oct 2025, SundayEdition - 3546
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !

June 13, 2025 தண்டோரா குழு

கோவையில் இன்று (13.06.2025) துவங்கியது ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 ஜுன் 15 வரை மூன்று நாட்களுக்கு நடைபெறுகின்றது.

கோவை மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த நுண்கலை ஆசிய நகை கண்காட்சி 2025-ன் சிறப்பு பதிப்பு கோவைக்கு மீண்டும் வந்துள்ளது.இன்று (13.06.2025) துவங்கிய இக்கண்காட்சி வரும் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தி ரெசிடென்சி டவர் ஓட்டலில், 54-வது பதிப்பாக காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதில் ஒரே இடத்தில் நாடு முழுவதிலுமிருந்து 50-க்கும் மேற்பட்ட சிறப்பான வடிவமைப்பும், புகழ் பெற்ற பிராண்ட்களின் நகைகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.எப்போதும் இல்லாத அளவிற்கு புதிய நகை வடிவமைப்புகள், கவர்ச்சிகரமான நகைகள் இடம் பெற்றுள்ளன.மிக நுட்பமான வேலைப்பாடுகளை கொண்ட தங்க நகைகள்,வைர நகைகள் தனித்துவமிக்க வைகயில் ஆசிய ஜூவல்ஸ் ஷோவில் இடம் பெற்றுள்ளன.

நுண்கலை தங்க நகைகள், வைரம், பிளாட்டினம், பாரம்பரிய வகை, திருமண அலங்கார நகைகள், ஆன்டிக், அரிய வகை கற்கள் பதித்தவை, குன்டன், ஜவாவு, போல்கி, மற்றும் வெள்ளி நகைகள் இவற்றில் சில ஆகும். கோவை நகரில் நடக்கும் இந்த ஆசிய நகை கண்காட்சி, மிகவும் நுண்ணிய வகை சார்ந்தது. வரும் திருவிழாக் காலங்களுக்கும், திருமணங்களுக்கும் ஏற்ற நகைகளை வாங்க ஒரே இடமாக திகழ்கிறது.

ஒரே இடத்தில் அரிய வகை கற்கள், வடிவமைப்புகள், இங்குள்ளன. தென்னிந்திய அளவில் உலகத்தரம் வாய்ந்த நகைகள் இடம் பெற்றுள்ளன.சொகுசு வகை நகை கண்காட்சி வடிவமமைப்புகள் பெங்களுரு, மும்பை, ஜெய்ப்பூர், ஐதராபாத், சென்னை மற்றும் கோவையில் தயாரான நகைகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து பிராண்ட்களின் நகைகள் சர்வதேச தரத்தில் இந்தியா முழுவதிலுமான நகைகள் இடம் பெற்றுள்ளன.

பெங்களுரு கஜராஜ், கிருஷ்ணய்யா செட்டி குழுமம், டில்லியை சேர்ந்த ஷேகல், ஷிரயன்ஸ் ஜூவல்ஸ், மும்பையை சேர்ந்த நேகா கிரியேஷன்ஸ், ரேணுகா பைன் ஜூவல்லரி, ஹவுஸ் ஆப் இபன்ஸ், டயமரன், ரே வேரா, பிரித்தம் ஜூவல்ஸ், பிடிஇசட் ஜூவல்ஸ், ஜீயனா ஜூவல்ஸ் போன்றவை இடம் பெற்றுள்ளன. கோவை கீர்த்திலால் காளிதாஸ், கற்பகம் ஜூவல்லர்ஸ், சென்னை அஞ்சலி, கிராண்டியுர், தி வெள்ளி ஷாப், பாலாஜி பியர்ல்ஸ் போன்றவை இடம் பெற்றுள்ளன. ஜெய்ப்பூரை சேர்ந்த ஜெம்ஸ்ரஸ், எப்இசட் ஜெம்ஸ் ஆகிய நிறுவனங்களும் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

மேலும் படிக்க