• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் 3ம் அலையை எதிர்கொள்ள 11,525 படுக்கைகள் தயார்

January 8, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் முழுவதும் 3 ம் அலையை எதிர்கொள்ள 11525 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது பொதுமக்கள் அச்சம் அடைய தேவையில்லை கோவையில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

கோவை கொடிசியாவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்;-

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனடியாக சிகிச்சைகளை வழங்க வேண்டும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்க வேண்டும் என முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.கோவை மாவட்டத்தில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.குறிப்பாக அரசு மருத்துவமனை கொடிசியா வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை 5521.
தற்போது தயார் நிலையில் உள்ளது. இதில் சாதாரண படுக்கைகள் என்பது 4 ஆயிரத்து 772 மற்றும் கொடிசியா வளாகத்தில் 650 படுக்கைகளும்,136 ஆக்சிஜென் படுக்கைகள், அரசு மருத்துவமனைகளிலும், அதேபோல் 113 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள் உள்ளன. இதேபோல் 4272 படுக்கை வசதிகள் தனியார் மருத்துவமனைகளில் தயாராக உள்ளது.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 11 ஆயிரத்து 525 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் தலைமையில் செய்துள்ளனர். கொடிசியா வளாகத்தை பொருத்தவரை 650 படுக்கை வசதிகள் அதாவது 24 மணி நேரத்தில் ஒரு நாளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்து விரைந்து குணமடைய செய்ய அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 1614 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றைக்கு மட்டும் 408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு உரிய முறையில்,மாவட்ட நிர்வாகம் சிகிச்சை அளித்து வருகிறது.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை டெங்கு பாதிப்பு இல்லாமல் ஓமைக்ரான் பாதிப்பால் ஒருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.மேலும் பலருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் முடிவு இன்னும் வரவில்லை.டெங்கு வைரஸ் காய்ச்சல் வராமல் இருப்பதற்கான அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் செய்யப்பட்டுள்ளன.டெங்கு பாதிப்பை பொறுத்தவரை 900 பேர் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளும் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஓமைக்ரான் பாதிப்பு சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள் தடுப்பூசி என்பது அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்று,அதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கோவை மாவட்டத்தில் 96 சதவீதம் பேர், இரண்டாவது தவணை என்பது 78% செலுத்தியுள்ளார்கள்.

நாளை தடுப்பூசி முகாம்கள் கோவை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அனைவரும் இந்த முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது என்பது நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கை, குடும்பத்தில் ஒருவர் போட்டுக்கொள்ளாமல் இருந்தாலும் நம்முடைய நண்பர்கள் போட்டுக்கொள்ளாமல் இருந்தாலும், நம்மை பாதிக்கும். அதை ஒரு மக்கள் இயக்கமாக, முதல்வர் கூறியபடி எடுத்துச்சென்று நமக்குத் தெரிந்தவர்கள் யாரெல்லாம் மற்றும் அவர்கள் உறவினராக கூட இருக்கலாம் நாம் அவர்களைப் பார்த்து நன்றாக இருக்கின்றீர்களா என்று கேட்பதை விட தடுப்பூசி போட்டீர்களா என்று கேட்டால் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவது போல இருக்கும்.

முதல் தவணை போட்டுவிட்டு, இரண்டாவது தவணை போட வில்லை என்றால் அதை எப்போது போட வேண்டும் என்று பாருங்கள் என கேட்க வேண்டும். அப்படி எடுத்து சொல்கின்ற போது, ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.ஒட்டுமொத்தமாக தடுப்பு ஊசி செலுத்தி இருக்கிறவர்கள் மற்ற மக்களைப் பார்க்கும்போது இந்த வாசகத்தை உச்சரிக்கும் போது நிச்சயமாக அவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற நிலை ஏற்படும்.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களை விட 100% தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் என்ற நிலை வர வேண்டும்.தற்போது,முதல் தவணை தடுப்பூசி 96% பேர் செலுத்திக் கொண்டு உள்ளனர் இரண்டாவது தவணை 78% உள்ளதை விரைவாக 100% எட்டக்கூடிய நிலைக்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

2 லட்சம் தடுப்பூசிகள் தற்போது கோவை மாவட்ட நிர்வாகத்திடம் கையிருப்பில் உள்ளது. இரவு நேர ஊரடங்கு என்பது மிகத் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது, அதேபோல ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதை மிகத் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவுகளை வழங்கியுள்ளார்.

மாவட்ட நிர்வாகம் காவல்துறை என அனைத்துத் துறைகளும் இதில் இணைந்து பணியாற்ற கூடிய நிலையில், நடவடிக்கை எடுத்தாலும் கூட ஒட்டுமொத்த பொதுமக்களும் நம்மால் மற்றவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்ற நிலையை, மக்கள் முழு ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் பொதுவாக இரண்டாவது அலையில் இருக்கக் கூடிய சூழலை விட தற்போது பாதிப்பு என்பது ஓரளவிற்கு மக்கள் விழிப்புணர்வு அடைந்து அதன் காரணமாக கட்டாயம் முக கவசம் அணிந்துள்ளனர். தடுப்பூசியில் செலுத்திக் கொண்டுள்ளனர். அதனால், பாதிப்புகள் குறைவாக உள்ளது, பாதிப்பு குறைவு என்பதற்காக நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது கவனமாக இருக்க வேண்டும்.

கோவை, திருப்பூர், நீலகிரி போன்ற மற்ற மாவட்டங்களில் இருந்து கோவைக்கு வந்து சிகிச்சை பெறக்கூடிய ஒரு தலைமை இடம் கோவை. அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்து இங்கு வந்து சிகிச்சை பெறுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

இந்த நிகழ்வின்போது,மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், சிஆர்.இராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி, முன்னாள் எம்பி நாகராஜ், சுகாதாரதுறை துணை இயக்குனர் அருணா, மாநகர சுகாதார அலுவலர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க