March 14, 2018
தண்டோரா குழு
கோவை பெரியகடைவீதியில் உள்ள ஸ்ரீ நிதி கோல்டு மற்றும் கொச மட்டம் தங்க நகை கடைகளில் அதிகமான பணபரிவர்தனை என்ற அடிப்படையில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
கோவை பெரிய கடைவீதியில் உள்ள விமல் என்பவருக்கு சொந்தமான ஶ்ரீநிதி என்ற கடையில் வருமான வரி துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.இன்று காலை முதல் 5 நபர்கள் கொன்ட குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதே போல கோவையில் உள்ள கொசமட்டம் பைனான்ஸ் கம்பெனியிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ரயில்நிலையம்,காந்திபுரத்தில் உள்ள கிராஸ் கட் சாலை,கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளிலும் கொசமட்டம் பைனான்ஸ் கிளைகள் செயல்பட்டு வருகின்றது.இதில் அதிக பணபரிவர்த்தனை தொடர்பாக அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.